ETV Bharat / state

’திருவெறும்பூர் தொகுதிக்கு என்று பிரத்தியேக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது’ - மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முருகானந்தம் - etv news

திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றும், நல்லவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் ஆதரவளிப்பார்கள், மக்கள் நீதி மய்யம் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அக்கட்சி வேட்பாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முருகானந்தம் பேட்டிtrichy
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முருகானந்தம் பேட்டி
author img

By

Published : Mar 22, 2021, 12:22 PM IST

திருச்சி: மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச் செயலாளரும், திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான முருகானந்தம், திருவெறும்பூர் எழில் நகரில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று (மார்ச்.22) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியவை பின்வருமாறு:

‘’நான் ஏற்கனவே கல்விக்காகவும் பெண்களுக்காகவும் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்து வருகிறேன். தற்போதைய சூழ்நிலையில் திருவெறும்பூர் தொகுதியை பொறுத்தவரை ஏமாற்றமும் கோபமும் காணப்படுகிறது. ஓசூருக்கு அடுத்தபடியாக திருவெறும்பூர் இன்ஜினியரிங் ஹப்பாக (மையமாக) மாறியிருக்க வேண்டும். ஆனால், அதை நாம் தவறவிட்டு விட்டோம். அது கொண்டு வரப்படாதது கோபத்தை ஏற்படுத்துகிறது. ஊழல் அதிகாரத்தின் மையமாக இருக்கிறது.

10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்து வருகிறது. ஆனால், திருவெறும்பூர் தொகுதிக்கு எவ்வித நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. தற்போது, அதிமுக சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் குமார், 10 ஆண்டுகளாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இந்தத் தொகுதிக்கு என்று அவர் எதுவுமே செய்யவில்லை. அதேபோல் திமுகவும் இந்தத் தொகுதியில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது. அவர்களும் இந்தத் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. நான் மற்றவர்கள்மீது பழி போடவில்லை.

ஒரு முறை எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் நல்ல விஷயங்கள் தொகுதிக்கு கொண்டு வரப்படும். தொழிற்சாலைகள் தொகுதியில் பெருகுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி முன்மாதிரி தொகுதியாக மாற்றப்படும். இதில், இரண்டு ஆண்டுகளில் 25 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வேலை வழங்க முடியும். நாளை மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் திருவெறும்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.

அப்போது, திருவெறும்பூர் தொகுதிக்கு என்று பிரத்தியேக தேர்தல் அறிக்கையை அவர் வெளியிடுகிறார். அதில் 25 திட்டங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். ’2025 க்கு முன்பு 25’ என்ற தலைப்பில் இந்தத் தேர்தல் அறிக்கை இருக்கும். அதில் ஒன்று இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம். அதேபோல், மாதம் ஒருமுறை தொகுதிக்குட்பட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வலம் வந்து குறைகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு கழிப்பிடம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மீதமுள்ள 22 திட்டங்களையும் கமல் நாளை அறிவிப்பார். திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது, புதிதாக வந்த எம்ஜிஆர் ஆட்சியை பிடித்தார். அதுபோல், நல்லவர்கள் வரும்போது தமிழ்நாடு மக்கள் ஆதரவு அளிப்பார்கள். அதனால், மக்கள் நீதி மய்யம் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக, திமுகவினர் தமிழ்நாட்டை சீரழித்து தலைமுறை தலைமுறைக்கு பணம் சேர்த்து வைத்துள்ளார்கள்.

அதனால், அடுத்து வரும் தலைமுறை நல்ல தமிழ்நாட்டை பார்க்க வேண்டும். சீரழிந்து வரும் தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும். திருவெறும்பூர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்களிடம் எழுச்சியும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணமும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதர கட்சிகள் வெளியிட்ட தமிழ்நாட்டின் தேர்தல் அறிக்கை திருவெறும்பூர் தொகுதிக்கு பொருந்தாது. குடும்பத் தலைவிக்கு 1,500 ரூபாய் மாதந்தோறும் வழங்க வேண்டும் என்று கமல்ஹாசன் அறிவித்தார்.

இது அறிவியல் பூர்வமாக திட்டமிட்டு அறிவிக்கப்பட்டதாகும். திமுக, அதிமுக கொடுத்த இலவசங்களை மக்கள் மறந்துவிட்டார்கள். திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: அதிமுக கிளை நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கே.சி.கருப்பணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.