இதுதொடர்பாக பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹைட்ரோகார்பன், பாதுகாக்கப்பட்ட பெட்ரோ - ரசாயன மண்டலம், சாகர்மாலா, அனல்மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள், நியூட்ரினோ திட்டம், 8 வழிச்சாலை, கெயில் குழாய் பதிப்பு உள்ளிட்ட திட்டங்களை கைவிடக்கோரியும், காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரியும் ஜூன் 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணத்தில் தொடங்கி புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் 600 கிலோ மீட்டர் நீள மனித சங்கிலிப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும்’ என்றும் அவர்கள் தெரிவித்தனர்.