ETV Bharat / state

ரயில்வே பணிமனை, ஹெச்ஏபிபி தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

திருச்சி: மத்திய அரசின் தொழில் நிறுவனங்களான பொன்மலை ரயில்வே பணிமனை, துப்பாக்கி தொழிற்சாலை, ஹெச்.ஏ.பி.பி. தொழிற்சாலை ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Mar 23, 2020, 11:02 PM IST

rayilway
rayilway

திருச்சி பொன்மலையில் செயல்படும் ரயில்வே பணிமனையில் ரயில் இஞ்ஜின் பழுது நீக்குதல், ரயில் பெட்டி தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. இதில் சுமார் நான்காயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 25ஆம் தேதி வரை (மூன்று நாள்கள்) விடுமுறை அளித்துள்ளதாக பொன்மலை ரயில்வே பணிமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால், நுழைவுவாயில் மூடப்பட்டு பணிமனை வெறிச்சோடி காணப்படுகிறது. விடுமுறை குறித்த தகவல் தெரியாத சில பணியாளர்கள் பணிமனைக்கு வந்து திரும்பிச் சென்றனர். அதேபான்று 900க்கும் மேற்பட்டோர் பணி புரியும் மத்திய பாதுகாப்புப் படைகளின் தொழிற்சாலைகளான துப்பாக்கி தொழிற்சாலை, ஹெச்.ஏ.பி.பி. தொழிற்சாலைகள் ஆகியவை உள்ளன.

இவற்றிற்கும் கரோனா வைரஸ் பீதி காரணமாக இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பணிகளை வீட்டிலிருந்து மேற்கொள்ளும்படி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலைக்குள் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், மருத்துவம், மின்சாரம் உள்ளிட்ட பணிகளைப் பார்க்கும் தொழிலாளர்கள் மட்டுமே வந்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் மனு அளிக்க வந்த மக்கள் - கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.