டெஸ்பூர்: அஸ்ஸாமில் டெஸ்பூரில் (Tezpur) போடோஸ் (Bodos) பழங்குடியினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்களின் பாரம்பரிய அரிசி பீருக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்துள்ளது. இதன்படி, ஜோ குவ்ரான் (Jou Gwran), ஜோ பிட்வி (Jou Bidwi) மற்ற்ம் ஜோ கிஷி (Jou Gishi) ஆகிய மூன்று அரிசி பீர்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த புவிசார் குறியீடு என்பது பொருளின் உற்பத்தி மூலத்தையும், அதன் பாரம்பரியம் மற்றும் பொருளின் நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. முன்னதாக, அஸ்ஸாமிலன் டிமாசா (Dimasa) சமூகத்தின் அரிசி பீருக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்தது.
இதையும் படிங்க: புவிசார் குறியீட்டில் முதன்மை வகிக்கும் தமிழகம்..வேளாண் பட்ஜெட் அறிக்கையில் வெளிவந்த சிறப்பு அறிவிப்புகள்!
மேலும் டெஸ்பூரைச் சேர்ந்த மினுமா போரோ என்பவர் இது குறித்து கூறுகையில், “அனைத்து அரிசி பீர்களும் வீட்டிலே தயார் செய்யப்படுகின்றன. எங்களது (போடோஸ்) சமூகத்தில் இது ஒரு கலாச்சாரமிக்க வரவேற்பு பானமாக வழங்கப்பட்டு வருகிறது. குறைந்த அளவு தண்ணீர் உடன் பாதியளவு வெந்த அரிசி மற்றும் ஈஸ்ட் மூலங்கள் சேர்த்து புளிக்க வைத்து இந்த அரிசி பீர் தயார் செய்யப்படுகிறது. இது எங்களது முன்னோர்களால் எங்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், இதில் சிறிய மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன” எனத் தெரிவித்தார்.