ETV Bharat / state

“விநாயகர் சதுர்த்தியன்று மதுபானக் கடையை மூட வேண்டும்” - இந்து அமைப்பினர் கோரிக்கை! - திருச்சி காவல் ஆணையர் காமினி

vinayagar chaturthi 2023: திருச்சியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தியன்று மதுபானக் கடையை அடைக்க வேண்டும் என இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 1:10 PM IST

திருச்சியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

திருச்சி: விநாயகர் சதுர்த்தியன்று மதுபானக் கடையை அடைக்க வேண்டும் என இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆலோசனைக் கூட்டம்: விநாயகர் சதுர்த்தி வருவதையொட்டி, விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டம், திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர்கள், தெற்கு, வடக்கு மற்றும் தலைமையிடம், அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள், அனைத்து சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள், இந்து அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என சுமார் 200 நபர்கள் பங்கேற்றனர்.

வருகின்ற 18 ஆம் தேதியன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா (சிலை பிரதிஷ்டை) மற்றும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாநகரில் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பிரச்சினைக்குரிய இடங்கள் கண்டறியப்பட்டு, ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள முக்கிய சந்திப்புகளில் ஊர்வலம் தடையில்லாமல் விரைவாக செல்லவும், நிகழ்ச்சியின் போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் நிகழ்ச்சியை நடத்திட பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

பட்டாசு வெடிக்க கூடாது: இக்கூட்டத்தில், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பேசுகையில், “விநாயகர் ஊர்வலத்தில் கொண்டு வரப்படும் சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. அரசியல் கட்சிகள் மற்றும் சாதி தொடர்பான பேனர்கள் வைக்கக்கூடாது. விழா நடைபெறும் இடத்தில் ஒலிபெருக்கி காலை மாலை ஆகிய நேரங்களில் 2 மணிநேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்க கூடாது.

சிலைகளை மாட்டுவண்டி, மீன்பாடி வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் எடுத்து வரக்கூடாது. சிலை ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். புதிய வழி தடத்தில் செல்லக்கூடாது. சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். ஊர்வலத்தின் போது எவ்வித கோஷமும் போட அனுமதிக்க கூடாது.

மது அருந்திவிட்டு வரக்கூடாது: சிலை கரைக்கும் போது தேவையற்ற பொருள்களை சிலையுடன் சேர்த்து கரைக்ககூடாது. சிலையை கரைத்த பின் வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து யாரும் பயணிக்க கூடாது. ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது.

விநாயகர் சிலை நிறுவுவதற்கும் மற்றும் கரைப்பதற்கும் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின் படி எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாவண்ணம் கவனித்துக்கொள்ள வேண்டும். விழா நிர்வாகிகள், காவல்துறையினருக்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்” என்றுக் கூறினார்.

மதுபான கடையை மூட வேண்டும்: அதனைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பேசுகையில், விநாயகர் சிலைக்கு அனுமதி என்பது நாங்கள் கேட்பதே கிடையாது. ஒலி ஒளி அமைப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கினால் போதும். பிரச்சினைக்குரிய இடம் குறித்து எங்களிடம் கூறினால், நாங்கள் மாற்று இடத்தை தேர்வு செய்து கொள்கிறோம்.

மேலும் சிசிடிவி கேமரா பொருத்துவதை காவல்துறை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் மது போதையில் யாரும் வரக்கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் அன்றைய தினம் மதுபான கடையை அடைக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: விநாயகர் சிலைகள் கரைப்பதை கண்காணிக்க குழு - தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.