ETV Bharat / state

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஹெச். ராஜா உருவப்படம் எரிப்பு! - திருச்சி செய்திகள்

திருச்சி: பத்திரிக்கையாளர் மீது நிகழ்த்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலை கண்டித்து மணப்பாறையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஹெச். ராஜா ஆகியோர் உருவப்படம் எரிப்பு.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஹெச். ராஜா உருவப்படம் எரிப்பு!

author img

By

Published : Mar 5, 2020, 9:17 PM IST

வார இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்திக் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். இந்தக் கொலைவெறி தாக்குதல் பொதுமக்கள் மற்றும் சக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதனை எதிர்த்து சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்த செய்தியை வெளியிட்டதற்காக கார்த்திக் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு அமைப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டம் மணப்பாறையில், தமிழ் தேசிய கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் உலகநாதன் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆகியோரை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பினார். பின்னர் அட்டையில் ஒட்டப்பட்டிருந்த இருவரின் உருவப்படத்தையும் சாலையில் போட்டு தீ வைத்து கொளுத்தினார். இச்சம்பவம் இப்பகுதி ஆளும் கட்சி, பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.