திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள அஞ்சாலிகளத்தை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மனைவி கிளாரா ஞானசெல்வி(39). இவர், கோவில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று பணி முடிந்து தனது மகன் யாகோப் பிரிட்டோவுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கம்பத்திலிருந்து பயணிகளுடன் திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்தை மணப்பாறை அரசுப் பேருந்து பணிமனை அருகே முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் கீழே விழுந்த கிளாரா ஞானசெல்வி அரசுப் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மணப்பாறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனின் அஜாக்கிரதையால் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எஸ்.பி.பி. உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் அறிவிப்பு!