ETV Bharat / state

திருச்சியில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி திருட்டு! - திருச்சி

திருச்சி: தொட்டியம் அருகே மருதம்பட்டி கிராமத்தில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியைத் திருடிச் சென்ற நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

gold-theft
author img

By

Published : May 20, 2019, 2:38 PM IST

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே முருங்கை ஊராட்சி மருதம்பட்டியில் செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இந்நிலையில் அர்ச்சகர் வழக்கம்போல் இரவு கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பின்பு காலையில் கோயிலை திறக்க வந்தபோது, கோயிலின் முன்பக்க திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது செல்லாண்டி அம்மன் கோயிலில் அம்மன் கழுத்திலிருந்த தங்க தாலியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அதோடு கோயிலிலிருந்த சரவிளக்கு, தீப விளக்கு, மணி, இரண்டு பித்தளை குடங்களும் திருடு போயிருந்தது.

அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி திருட்டு

இதையடுத்து கட்டுப்புத்துார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

Intro:திருச்சியில் அருகே அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

Body:குறிப்பு: இதற்கான வீடியோ மெயில் மற்றும் எப்டிபி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ....

திருச்சி:
திருச்சி அருகே கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே முருங்கை ஊராட்சி மருதம்பட்டியில் செல்லாண்டியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்கள் உள்ளது.
சம்பவத்தன்று வழக்கம் போல அர்ச்சகர் இரவு பூட்டிவிட்டு சென்றார். பின்னர் பூஜைகளுக்காக காலை கோவிலுக்கு திறக்க வந்தபோது கோவிலின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது செல்லாண்டி அம்மன் கோவிலில் அம்மன் ச கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி மாயமாகி இருந்தது. அதோடு கோயிலில் இருந்த சரவிளக்கு, தீப விளக்கு, மணி, இரண்டு பித்தளை குடங்களும் திருடு போயிருந்தது. இச்சம்பவம் அறிந்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் காட்டுப்புத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கத் தாலி உள்ளிட்ட பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Conclusion:பூஜைக்காக அர்ச்சகர் வந்தபோது கோவிலின் முன்பக்க கதவு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.