திருச்சி: துவரங்குறிச்சி ஸ்டாலின் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் சவிதா(19). இவரது அம்மாவிடம் பக்கத்து வீட்டு பெண், சவிதா ஆண் நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் அடிக்கடி பேசி வருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து வீட்டில் இருந்த சவிதாவிடம், அவரது அம்மா இதுகுறித்து கேட்டு கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சவிதா, வீட்டில் யாரிடம் தகவல் தெரிவிக்காமல் தலைமறைவாகியுள்ளார். அச்சமடைந்த அவரது குடும்பத்தினர், சவிதாவை அவரது உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (அக்-2) காலை அதே பகுதியைச் சேர்ந்த தனிநபருக்குச் சொந்தமான தோட்டத்தில், தூக்கிட்ட நிலையில் சவிதாவை சடலமாக கண்டுள்ளனர். இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது; சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சவிதாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த துவரங்குறிச்சி காவல்துறையினர், தற்கொலைக்கு வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் 90 கோடியைத் தாண்டிய தடுப்பூசி திட்டம்