கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பு ? வீட்டை விட்டு வெளியேறிய தன்பாலின ஈர்பாளர்கள்! - mother
திருமணமாகி 16 நாளில் கணவரை விட்டு பிரிந்து தோழியோடு சென்ற இளம் பெண், தாயின் பாச போராட்டத்தால் இரு குடும்பத்தாரின் சம்மதத்தோடு பெண்ணின் வீட்டிற்கே அழைத்துச் சென்றுள்ளனர்.
திருச்சி:திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் சுசிலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 4 பிள்ளைகள் இவரது கணவர் இறந்துவிட்டதால் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இவரது நான்காவது மகள் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கடந்த ஒரு வருடமாக அப்பகுதியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது அதே மில்லில் வேலை பார்க்கும் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த 22 வயது பெண்ணுடன் நட்பாகி அது நாளடைவில் நெருக்கமானது. இணைப்பிரியா தோழிகளாக மாறியவர்கள் பல இடங்களில் சுற்றியுள்ளனர். இந்நிலையில் 22 வயது பெண்ணுக்கு அவரை விட 9 வயது பெரியவரான தாய் மாமனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனல் மனமுடைந்த அப்பெண் வீட்டில் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் தனது 19 வயது தோழிக்கு தகவல் கொடுத்து அவரையும் வீட்டை விட்டு வெளியே வரசொல்லியிருக்கிறார்.அதனால் 19 வயது பெண் விடுமுறை முடிந்து விட்டது உடனடியாக வேலைக்கு செல்லவேண்டும் என்று தனது தாயிடம் தெரிவித்துவிட்டு இருவரும் செல்போனை ஆப் செய்துள்ளனர்.
நீண்ட நேரமாக தனது மகளை தொடர்பு கொள்ள முடியாததால் தாய் புத்தாநத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் 19 வயது பெண்ணும் தோழியும், சென்னை அண்ணா நகரில் உள்ள pcvc என்ற தனியார் அறக்கட்டளை காப்பகத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.
இதனையறிந்த தாய் அன்று இரவே சென்னை கிளம்பி தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்கவேண்டும் எனக்கேட்டுள்ளார் காப்பகத்தில் பணியாற்றுபவர்கள் அனுப்ப மறுத்துள்ளனர் .இதைக் கேட்ட அதிர்ந்து போன தாய் திருமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று சம்பவம் குறித்து தெரிவித்த புகார் கொடுத்துள்ளார்.
புகாரை பெற்ற போலீசார் இரவு நேரம் என்பதால் மறுநாள் காலை காப்பகத்தில் உள்ளவர்கள் மற்றும் இரண்டு தோழிகளையும் காவல் நிலையம் வரசொல்லி விட்டு சென்றுள்ளனர் அதன் பேரில் காலை வந்த தோழிகளை காப்பகத்தில் இருப்பவர்கள் அனுப்ப மறுத்துள்ளனர். இதனால் சோர்வடைந்த தாய் காவல் நிலைய வாசலிலே படுத்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தனது மகளை அழைத்து செல்லாமல் தான் செல்லமாட்டேன் என உறுதியாக மாலை வரை போராடிய தாயின் பாச போராட்டத்தை கண்ட திருமங்கலம் போலீசார் இரண்டு தோழிகளுக்கும் பலமுறை கவுன்சிலிங் வழங்கி, இரவு பத்துமணியளவில் காப்பத்தில் இருந்து இளம்பெண்ணின் தாயோடு அனுப்பி வைத்துள்ளனர். இரு தோழிகளும் ஒன்றாக இருப்போம் என்று தெரிவித்தால் இரு குடும்பத்தாரின் சம்மத்தோடு திருச்சி மணப்பாறையில் உள்ள 19 வயது பெண்ணின் வீட்டிற்கே அழைத்து சென்றுள்ளனர்