திருச்சி: கண்டோன்மென்ட் அலெக்சாண்ட்ரியா ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் திருச்சி எஸ்பிஐ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன்.
இந்தத் தம்பதி கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சிவானி (13) என்ற மகள் உள்ளார். இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். சிவானி தனது அம்மா உடன் வசித்து வந்துள்ளார்.
சிறுமி தற்கொலை
தினமும் காலையில் ஷர்மிளா வேலைக்கு சென்று விடுவது வழக்கம். நேற்று (ஜன.25) வங்கிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்து கதவை தட்டியவுடன் மகள் கதவை திறக்கவில்லை.
பின்பு ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது சிவானி தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்தது.
![தற்கொலை தீர்வல்ல](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14278312_th.jpg)
உடல் பருமன்
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கண்டோன்மென்ட் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சிவானி தனது தாயிடம் உடல் பருமனாக இருப்பதாக தொடர்ந்து குறிப்பிட்டு வந்துள்ளார்.
மன உளைச்சலில் இருந்த சிவானி யூ-டியூப்பில் வீடியோ பார்த்து தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் காவல் துறையினர் சிவானி உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
உடற்கூராய்விற்கு பிறகு சிறுமியின் உடலை பெற்றோரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: 4 வயது மகனை கொலைசெய்த தாய் தற்கொலை