தமிழ்நாடு ஓய்வு பெற்ற வனச்சரக அலுவலர்கள், மாநில வனப்பணி அலுவலர்களின் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதற்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் மணி தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் வனத்துறையில் ஓய்வு பெற்ற அலுவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தகுதியில், உள்ள தனி அலுவலர் ஒருவரை தமிழ்நாடு அரசு நியமனம் செய்ய வேண்டும்.
மேலும் சங்கத்தின் மாநில மாநாட்டை சென்னை தேனாம்பேட்டையில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடத்த வேண்டும். பணி ஓய்வு பெறும் நேரத்தில் தற்காலிக பணி நீக்கம், நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தங்களது உண்மை நிலையை தெளிவுப்படுத்தினால் நடவடிக்கைகளில் இருந்து விடுபட நடவடிக்கை எடுக்கப்படும்.
வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிலருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டு ஊதியமும் வழங்கப்பட்டது. ஆனால் அலுவலர்களில் பலர் பணியாற்றிய காலத்திலேயே ஊதியம் வழங்கப்படாமல் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 2 லட்சம் வரை நிலுவை உள்ளது. அதை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க:ஓமலூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க தமாகா தீர்மானம்