ETV Bharat / state

பேனர் வைப்பதற்கான விதிமுறைகளை தளர்த்த ஆட்சியரிடம் மனு - திருச்சி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம்

திருச்சி: பேனர் வைப்பதற்கான விதிமுறைகளை தளர்த்தி, பேனர் வைப்பதற்கான அனுமதியை ஆன்லைன் மூலம் பெறும் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்று பேனர் உரிமையாளர்கள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

flex-association-give-petition-to-trichy-collector
author img

By

Published : Sep 23, 2019, 10:37 PM IST

திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சிவராசு தலைமையில் இன்று நடந்தது. இதில் திருச்சி மாவட்ட பேனர் உரிமையாளர்கள் சங்கத்தினர், திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், " திருச்சி மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட பேனர் பிரிண்டிங் நிறுவனங்கள் கடந்த 20 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது.

இதில் பலரும் 20 முதல் 25லட்சம் ரூபாய் வரை வங்கியில் கடன் பெற்று இந்த தொழிலை மேற்கொண்டுவருகின்றனர். ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தபட்சம் 25 தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். இந்த தொழில் நசுக்கப்பட்டால் பல்வேறு குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும்.

பேனர் வைப்பதற்கான அனுமதி இணையம் மூலம் பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னையில் பேனர் விழுந்து ஒரு இளம்பெண் மரணம் அடைந்த சம்பவம் துயரமானதாகும். அதை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. எனினும் இந்த ஒரு சம்பவத்தைக் காட்டி பேனர்கள் வைப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதைக் கைவிட வேண்டும்.

பேனர் வைப்பதற்கு மாநகராட்சி, காவல் ஆணையர் எனப் பல இடங்களில் அனுமதி வாங்க வேண்டும் என்ற விதிமுறைகள் எங்களது தொழிலுக்குத் தடையாக இருக்கும் . அதனால் பிளக்ஸ் பேனர் வைப்பதற்கான அனுமதியை இணையம் மூலம் பெறும் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் " என்றார்.

Intro:பிளக்ஸ் பேனர் வைப்பதற்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Body:திருச்சி:
பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கான விதிமுறைகளை தளர்த்த கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சிவராசு தலைமையில் இன்று நடந்தது அப்போது திருச்சி மாவட்ட பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர் அப்போது கோவிந்தராஜுலு செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் இளம்பெண் பேனர் விழுந்து கிடந்த சம்பவம் வருத்தம் அளிக்கக்கூடியது எனினும் இந்த ஒரு காரணத்தை காட்டி பிளக்ஸ் பேனர் தொழிலை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இது ஏற்றுக்கொள்ளக்கூடியது கிடையாது அதனால் தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு பிளக்ஸ் பேனர் தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்காக தற்போது ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம் இதன் பின்னரும் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வில்லை என்றால் தமிழகம் முழுவதும் பிளக்ஸ் பேனர் உரிமையாளர்களை ஒன்று திரட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
திருச்சி மாவட்ட பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்,
திருச்சி மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனங்கள் கடந்த 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தபட்சம் தலா 25 தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். சென்னையில் பேனர் விழுந்து ஒரு இளம்பெண் மரணம் அடைந்த சம்பவம் துயரமானதாகும். இதை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. எனினும் இந்த ஒரு சம்பவத்தை காட்டி பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கான விதிமுறைகளை கடுமையாக்கப்பட்டுள்ளது. அதை கைவிட வேண்டும். பிளக்ஸ் பேனர் வைக்க மாநகராட்சி, போலீஸ் கமிஷனர் என பல இடங்களில் அனுமதி வாங்க வேண்டும் என்ற விதிமுறைகள் எங்களது தொழிலுக்கு தடையாக இருக்கும். அதனால் பிளக்ஸ் பேனர் வைப்பதற்கான அனுமதியை ஆன்லைன் மூலம் பெறும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

பேட்டி:
1. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு...

2. திருச்சி மாவட்ட உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன்.

Conclusion:தமிழகம் முழுவதும் உள்ள பிளக்ஸ் பேனர் உரிமையாளர்களை திரட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கோவிந்தராஜூலு கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.