சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் அலுவலர்கள் தீவிரமாக சோதனையிட்டனர்.
அப்போது, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து பயணிகள் மீது சந்தேகமடைந்த அலுவலர்கள், அவர்களை சோதனை செய்தனர். அதில், அவர்களிடம் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர்களிடமிருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான 4.5 கிலோ தங்கத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்த அலுவலர்கள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கார்பன் ஷீட்டில் சுற்றி தங்கம் கடத்திய பெண் கைது: 481 கிராம் தங்கம் பறிமுதல்!