ETV Bharat / state

கெளம்பாரகுட்டு மலைக்குன்றில் தீ விபத்து - மூலிகைகள் நாசம்! - மலைக்குன்று

திருச்சி: மணப்பாறை அருகே கெளம்பாரகுட்டு மலைக்குன்றில் ஏற்பட்ட காட்டுத் தீயால், ஒன்றரை ஏக்கர் பரப்பளவிற்கு மூலிகைச் செடிகள், சிறு மரங்கள் தீக்கிரையாகின.

தீயை அணைக்கும் தீயணைப்பு படைவீரர்
author img

By

Published : Mar 23, 2019, 4:37 PM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள துவரங்குறிச்சி அருகே அக்கியம்பட்டி, லிங்கம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு இடையே வனத்துறைக்கு சொந்தமான வேலமலை பீட்டில் கெளம்பாரகுட்டு எனும் சிறு மலைக்குன்று உள்ளது. இந்த மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.

வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர், பொதுமக்களுடன் இணைந்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தினால் வனப்பகுதியில் ஒன்றரை ஹெக்டர் பரப்பளவிற்கு பல்வேறு வகையான மூலிகைச் செடிகொடிகள், சிறு மரங்கள் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து மருங்காபுரி வனச்சரக அலுவலர்கள், துவரங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FILE_NAME : TN_TRI_01_23_FOREST_FIRE_ISSUE_TN10020.

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே வனப்பகுதியில் தீ விபத்து - ஒன்றரை ஹெக்டர் பரப்பளவிற்கு செடிகொடிகள், சிறு மரங்கள் எரிந்து நாசம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி அருகே அக்கியம்பட்டி, லிங்கம்பட்டி ஆகிய கிராமத்திற்கு இடையே வனத்துறைக்குட்பட்ட வேலமலை பீட் கெளம்பாரகுட்டு என்ற சிறு மலைகுன்று உள்ளது. இந்த மலைப்பகுதியில் மாலையில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் வனப்பகுதியில் ஒன்றரை ஹெக்டர் பரப்பளவிற்கு திட்டு திட்டாக 10 இடங்களில் பல்வேறு வகையான மூலிகைச் செடிகள், சிறு மரங்கள் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து மருங்காபுரி வனசரக அதிகாரிகள், துவரங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.