ETV Bharat / state

Video: நடைமேடையில் உறங்கிய பெண்ணை தாக்கிய பெண் காவலர் - உறங்கிய பெண்ணை தாக்கிய பெண் காவலர்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரை, பெண் காவலர் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Female policeman beat woman sleeping on platform at Trichy Chatram bus stand video went viral
நடைமேடையில் உறங்கிய பெண்ணை தாக்கிய பெண் காவலர்
author img

By

Published : Jul 14, 2023, 2:27 PM IST

நடைமேடையில் உறங்கிய பெண்ணை தாக்கிய பெண் காவலர்

திருச்சி: சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கடலூர், விருத்தாசலம், அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் புற நகர் பகுதிகளான சமயபுரம், குழுமணி, பெட்டவாய்த்தலை, குளித்தலை, முசிறி, துறையூர், லால்குடி, துவாக்குடி, திருவெறும்பூர், BHEL, நவல்பட்டு ஆகிய ஊர்களுக்கு உள்ளூர், தனியார் மற்றும் அரசுப்பேருந்துகள் நூற்றுக்கணக்கில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக இந்தப் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ஆதரவற்றோர் மற்றும் பேருந்தை தவற விடுபவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து கிடைக்காதவர்கள், யாசகர்கள் இரவு நேர கடை நடத்தி வருபவர்கள், இரவு நேரங்களில் சத்திரம் பேருந்து நிலைய நடைமேடையில் படுத்து உறங்குவது வழக்கம். பின்பு பேருந்து வந்தவுடன் அவர்களது சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.

இதேபோல் நேற்று இரவு அடையாளம் தெரியாத பெண் ஒருவர், பேருந்து நிலைய நடைமேடையில் அங்கு படுத்து உறங்கி உள்ளார். பேருந்து நடை மேடையில் படுத்து உறங்கிய அந்தப் பெண்ணை இரவு நேரப் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் லத்தியால் கடுமையாக தாக்கிய வீடியோ தற்பொழுது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

யார் அந்தப் பெண்? எதற்காக அங்கு படுத்து உறங்கினார்? என்ன காரணத்திற்காக அந்தப் பெண் காவலர் அந்தப் பெண்ணை தாக்கினார்? என்பது குறித்து தகவல் தெரியவில்லை. உறங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை பெண் காவலர் சரமாரியாக தாக்கும் வீடியோ தற்பொழுது வைரலாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த சம்பவத்தைதைப் பார்த்த அங்கிருந்த பயணிகள், படுத்து உறங்கும் ஒரு பெண்ணை என்ன காரணம் என்று விசாரிக்காமல் சரமாரியாக தாக்கக் கூடாது என மனக்குமுறலுடன் கடந்து செல்லும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. படுத்து உறங்கி கொண்டிருந்த பெண்ணை காவலர் தாக்கியதை சத்திரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ செய்துள்ளனர்.

பெண் ஒருவரை லத்தியால் கடுமையாகத் தாக்கிய பெண் காவலர் மீது உயர் அதிகாரிகள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் விசாரணை முடித்து வீடு திரும்பியவர் உயிரிழப்பு - போலீஸ் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.