மத்திய அரசு புதிதாக மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இச்சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் இச்சட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி-கரூர் பைபாஸ் சாலை அண்ணாமலை நகரில் இன்று (ஜூன் 5) விவசாயிகள் சட்ட நகலை எரிக்க முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து, விவசாயிகள் சட்ட நகலை கிழித்து எறிந்தனர்.
திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் விவசாயிகள் மேல்சட்டை அணியாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் விவசாயிகளுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர்.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை: ராஜகோபாலன் ஜாமீன் மனு ரத்து!