மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த வேளாண்மைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே மாநிலங்களவையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. அதேபோல் விவசாய சங்கத்தினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்.
இந்த வகையில் இச்சட்டம் நிறைவேற்றியதைக் கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் பலர் திருவோடு ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
திருச்சியில் விவசாயிகள் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.