ETV Bharat / state

திருச்சியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் - திருச்சி

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.ராஜாமணி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

1
author img

By

Published : Feb 1, 2019, 4:58 PM IST

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள், பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பிரிதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, கஜா புயலால் பாதித்த வாழை, மக்காச்சோளம் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது. பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளை ஏமாற்றும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, தமாகா விவசாய அணி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Intro:விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

Body:திருச்சி: திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னதாக ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கஜா புயலால் பாதித்த வாழை மக்காச்சோளம் நிவாரணம் வழங்க வேண்டும். மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது. பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளை ஏமாற்றும் போக்கை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமாகா, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது திருச்சி விமான நிலையம் அருகே செம்பட்டு என்எம்டி காலனியில் குடியிருந்து வரும் 90 தொழிலாளர்களின் வீடுகளை காலி செய்ய அந்நிறுவனத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். மாற்று இடம் வழங்காமல் அந்த இடத்தை காலி செய்ய முடியாது என்று ஆட்சியர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Conclusion:ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.