ETV Bharat / state

மேகதாது அணையை எதிர்த்து திருச்சியில் விவசாயிகள் சாலை மறியல் - மேகதாது அணை

திருச்சி: மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Mekedatu
Mekedatu
author img

By

Published : Jul 6, 2021, 7:51 PM IST

தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராடினர். எலும்புக்கூடுகளுடன் அரைநிர்வாணமாக மேல்சட்டை அணியாமல் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

அப்போது அய்யாக்கண்ணு கூறுகையில், ”1982-ஆம் வருடம் காவிரி ஆற்று தண்ணீர் தொடர்பாக சென்னை மாகாணம் மற்றும் மைசூர் மாகாணத்திற்கு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி காவிரியிலோ, தென் பெண்ணை ஆற்றிலோ எந்த இடத்திலும் அணை கட்ட கூடாது என்றும், காவிரி மூலம் கர்நாடகா அரசு 90,000 ஏக்கர் சாகுபடி செய்துகொள்ளலாம். மீதி காவிரியில் வரும் 1000 டிஎம்சி தண்ணீரையும் தமிழ்நாடு பயன்படுத்தி கொள்ளலாம் என்று இருந்தது.

அதனால், அப்பொழுது தமிழ்நாட்டில் 30 லட்சம் ஏக்கர் நிலம் சில இடங்களில் மூன்று போகம், சில இடங்களில் இரண்டு போகம் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், இன்று கர்நாடகா காவிரி நீரின் மூலமாக 30 லட்சம் ஏக்கர் மூன்று போகம் சாகுபடி செய்கிறது. தமிழ்நாட்டில் 15 லட்சம் ஏக்கரில் ஒரு போகம் சாகுபடி நடைபெறுகிறது.

கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்டிவிட்டால், 1982-ஆம் ஆண்டு கர்நாடகா காவிரி தண்ணீர் மூலமாக 90,000 ஏக்கர் சாகுபடி செய்தது போல, தமிழ்நாட்டில் 90,000 ஏக்கர்தான் சாகுபடி செய்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணைகட்ட அனுமதி வழங்க கூடாது என்றும், 1892-ஆம் ஆண்டுஉடன்படிக்கையின்படி தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைகட்ட கூடாது என்று உள்ளதை வைத்து தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டி உள்ள அணையை இடிப்பதற்கு உரிய உத்தரவினை வழங்கி தமிழக விவசாயிகளை தற்கொலையிலிருந்து காப்பாற்ற வேண்டுகிறோம்.

தமிழ்நாட்டின் சமூக நீதியை காப்பாற்றி, நிலைநிறுத்த சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகே யாருக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு என்று முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.

இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. அந்த சமயம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அமைச்சர் விவசாயிகள் மத்தியில் பேசினார்.

அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என்று அவர் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: அய்யாக்கண்ணுக்கு வீட்டு சிறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.