மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி அண்ணாமலை நகரில் இருந்து விவசாயிகள் பேரணியாக புறப்பட்டனர்.
அப்போது திருச்சி உறையூர் சாலை அருகே உள்ள நான்கு ரோட்டில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், "வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராட்டம் நடைபெறவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறோம்" என்றார்.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: வேளாண் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்திற்குத் தயாரான அரசு?