ETV Bharat / state

திருச்சியில் எலியை வாயால் கடித்து நூதன முறையில் போராடும் விவசாயிகள்! - tn govt

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தின் 14வது நாளாக வாயில் எலியை கடித்து நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 10, 2023, 9:39 PM IST

திருச்சியில் எலியை வாயால் கடித்து நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்

திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி - சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 14வது நாளாக வாயில் எலியைக் கடித்து நூதன முறையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது பேசிய அய்யாக்கண்ணு, '2016ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர் நீதிமன்றம் கூறிய பிறகு, பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலேயே போலியாக கையெழுத்தை போட்டு, மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது. ஆகையால், விவசாயக் கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டுகிறோம்.

மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். அதேபோல் ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும்; இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள்: பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வுமேற்கொள்ளப்படவுள்ளது என துணைவேந்தர் தகவல்

முறையாக சாகுபடி செய்தும் குடியிருந்து வரும் விவசாயிகளை வெளியேற்றாமல் வீட்டிற்கு வாடகையும், குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயிகளையும், பொது மக்களையும் காப்பாற்ற வேண்டுகிறோம். குறிப்பாக தக்காளி, வெங்காயம், காய்கறிகள் 1 கிலோ ரூ.1க்கு விற்கும் பொழுது கிராமங்களில் குளிர் சாதன கிடங்கை அரசே கட்டி கொடுத்து அதில் 1 கிலோ காய்கறிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக ரூ.10 கடன் கொடுத்து வைத்திருந்தால், 1 கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விலை வராமல் 1 கிலோ தக்காளி, வெங்காயத்தை ரூ.40க்கு பொது மக்களுக்கு விற்க முடியும்’ என்றார்.

'தனியார் நிறுவனங்கள் ரூ.5,00,000 கடன் கொடுத்து 48 மாதங்களில் ரூ.7 லட்சம் கட்டச்சொல்லி கையெழுத்து வாங்கி விட்டு ரூ.62 லட்சம் கடனைத் திருப்பிக் கட்டிய பிறகு 71 மாதங்களாக்கி 11 1/2 லட்சம் கட்டச் சொல்லி 1 தவணை கட்டவில்லையென்றால் டிராக்டர், கார்களை தூக்கி செல்பவர்களை கைது செய்ய வேண்டுகிறோம்.

மேலும், 100 நாட்கள் கூலி, பிரதமர் பென்சன், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவித் தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள், விவசாயக் கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது என்று மத்திய அரசு கூறிய பிறகும் பிடிக்கும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டுகிறோம்.

100 நாட்கள் வேலையாட்களை கோடைகாலமான 4 மாத காலத்தில் வேலை கொடுத்துவிட்டு சாகுபடி காலமான 8 மாதத்திற்கு விவசாய வேலை செய்ய அனுமதிப்பதுடன், சாகுபடி காலத்தில் 100 நாட்கள் வேலை கொடுத்து விவசாயத்தை அழிக்கக் கூடாது என்று வேண்டுகிறோம். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க உதவிட வேண்டுகிறோம்.

மேலும் காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில், டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும்' எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அய்யாகண்ணு பேசியதாவது, “தமிழக விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கு உகந்த விலை இல்லை, கரும்புக்கு உகந்த விலை இல்லை, விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கிறார்கள். ஆனால் அரசு இதை கண்டு கொள்ளாமல் மெத்தனப்போக்கில் செயல்படுகிறது.

அதேபோன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியும் இதுவரை கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை. விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். வாழ்வாதாரம் இழந்து, அத்தியாவசியப் பொருளை வாங்கக்கூட வழியில்லாமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆகையால் விவசாயிகள் உணவுக்குப் பதிலாக எலியை உன்று பிழைக்க வேண்டிய சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: Thanjavur: பருத்தி மற்றும் நெல் பயிர்கள் மழையில் மூழ்கி அழுகும் நிலை: பெரும் நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற விவசாயிகள் வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.