ETV Bharat / state

திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை மையங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்...!

திருச்சி: வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து  வாக்குப்பதிவு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தீவிரமாக நடைபெற்றது.

திருச்சியில் வாக்குப்பதிவு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரம்
author img

By

Published : Apr 19, 2019, 10:28 PM IST

திருச்சி நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் தனி அறையில் வைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. பின்னர் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அங்கேயே சீல் வைக்கப்பட்டு லாரிகள் மூலம் திருச்சி-மதுரை சாலையில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

நேற்றிரவு ஆரம்பித்த இந்தப் பணி இன்று மதியம் வரை நடைபெற்றது. திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அறைகளில் அடுக்கப்பட்டது.

இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சிவராசு, தேர்தல் பொது பார்வையாளர் அமித் குமார் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

மேலும் சீல் வைக்கப்பட்ட அறைக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்கு எண்ணும் மையத்தின் வளாகம் முழுவதும் சுழற்சி முறையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் 24 மணிநேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

Body:குறிப்பு: இதற்கான புகைப்படம் மெயில் மற்றும் எப்படிக் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....

திருச்சி:
திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் தனி அறையில் வைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு அங்கேயே சீல் வைக்கப்பட்டு லாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டது.
இவை திருச்சி-மதுரை சாலையில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வர இன்று மதியம் வரை ஆகிவிட்டது.
திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பிரித்து அறைகளில் அடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவராசு, தேர்தல் பொது பார்வையாளர் அமித் குமார் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட அறைக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு என்னும் மையத்தின் வளாகம் முழுவதும் சுழற்சி முறையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Conclusion:வாக்குப்பதிவு எந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.