ETV Bharat / state

தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - அமைச்சர் மகேஷ் பதில்

தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

education minister Anbil Mahesh Poyyamozhi
அமைச்சர் மகேஷ்
author img

By

Published : Jul 13, 2021, 3:43 PM IST

திருச்சி: திருவெறும்பூரில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கட்சி நிர்வாகிகளுடன் பொதுமக்களையும் சந்தித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதுச்சேரியில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை வரும் 16ஆம் தேதி பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன. இது குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தொடர்ந்து பள்ளிகள் திறப்பு குறித்து அலுவலர்கள் தெரிவிக்கும் கருத்துகளை முதலமைச்சரிடம் கொண்டு சேர்க்கவுள்ளோம். தற்போதுள்ள கரோனா சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் முதலமைச்சர் என்ன வழிவகை கூறுகிறாரோ அதன்படி பள்ளிகள் திறக்கப்படும்.

ஒரு வாரத்துக்கு முன்பு எடுத்த கருத்துக் கணிப்பின்படி, மூன்று லட்சத்து 40 ஆயிரம் பேர் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளியை நோக்கி வந்துள்ளனர்.

அரசுப் பள்ளியை நோக்கிப் படையெடுக்கும் மாணவர்கள்

நடப்பாண்டு அரசுப் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருகை அதிகமாக இருக்கும். வருகின்ற மாணவர்களைத் தக்கவைத்துக்கொள்ள போதுமான கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், இருக்கும் ஆசிரியர்களைத் தக்கவைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

அதற்கான ஆலோசனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. துறை ரீதியான ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து ஆய்வுசெய்யப்பட்டது. புதியதாக வரும் மாணவர்களைத் தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறோம். நீட் பயிற்சி கடந்தாண்டு செப்டம்பர் 9ஆம் தேதிமுதல் நடந்துகொண்டிருக்கிறது.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

நீட் தேர்வு

தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்பது நீட் வேண்டாம் என்பதுதான். தமிழ்நாட்டிற்கு விலக்கு என்பதில் திட்டவட்டமாக உள்ளோம். எனினும் ஆன்லைன் மூலமாக கடந்த ஆண்டு முதல் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது.

ஜனவரி 4ஆம் தேதிமுதல் ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. முதலமைச்சர் கூறியதுப0டி, தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு விலக்கு பெறுவதுதான் எங்கள் இலக்கு.

சுமார் 9, 10 ஆகிய வயதிற்கு மேற்பட்டவர்கள் இடைநிற்றல் அதிகரித்துவருகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, 17 விழுக்காடு இடைநிற்றலை 5 விழுக்காடாகக் குறைப்பதுதான் எங்களது இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

பள்ளிகள் திறப்பு

கருத்துக் கணிப்புகள் எடுக்கப்படவுள்ளன, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி பலர் வேலைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து அலுவலரிடம் கலந்தாலோசித்த நிலையில், இது குறித்து முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கிறாரோ அதன்படிச் செயல்படுவோம்.

கரோனா கட்டுப்பாட்டில் இருந்தால் பள்ளிகள் திறப்புக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோருக்குத் தைரியம் வர வேண்டும். இதற்குச் சற்று காலம் எடுத்தாக வேண்டும்.

புதுச்சேரியில் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கும், வழிவகைகள் குறித்து உற்று நோக்கிவருகிறோம். அதனடிப்படையில் முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிப்பு - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.