ETV Bharat / state

அதிமுக பிரமுகரை தாக்கிய திமுகவினர் 8 பேர் மீது வழக்குப்பதிவு!

author img

By

Published : May 6, 2021, 6:58 PM IST

திருச்சி: அதிமுக பிரமுகரை தாக்கிய திமுக நிர்வாகி உள்ளிட்ட 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக பிரமுகரை தாக்கிய திமுகவினர் 8 பேர் மீது வழக்குப்பதிவு!
அதிமுக பிரமுகரை தாக்கிய திமுகவினர் 8 பேர் மீது வழக்குப்பதிவு!

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் அருகே பெரிய ஆலம்பட்டி புதூரை சேர்ந்தவர் அதிமுக கிளை செயலாளர் பச்சைமுத்து (44).

இவரது வீட்டின் அருகே திமுக நிர்வாகி சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இதனை கொண்டாடும் விதமாக தனது நண்பர்கள் பாக்கியராஜ், பொன்னர், ரகுபதி, ஸ்டீபன், சரவணன், இளையராஜா, சுப்பிரமணி ஆகியோருடன் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளாங.

இதனை அறிந்த காவல் துறையினர், விரைந்து சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில், காவல் துறையினருக்கு பச்சமுத்து தான் தகவல் கொடுத்ததாக கூறி, சார்லஸின் நண்பரான இளையராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பச்சமுத்துவை அடித்து உதைத்துள்ளனர். இதில், காயமடைந்த பச்சமுத்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக திமுக நிர்வாகி உள்ளிட்ட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.