திமுக சார்பில் "அதிமுகவை நிராகரிப்போம்" என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த வகையில் இன்று திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் பெருவளநல்லூர் ஊராட்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் திமுக தரப்பில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, எம்எல்ஏ சவுந்தரபாண்டியன், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் துரை கந்தசாமி, லால்குடி நகர செயலாளர் துரை, ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன், ரவிச்சந்திரன், கல்லக்குடி செயலாளர் துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து திருச்சி மாநகரம் தில்லை நகர் பகுதி திமுக சார்பில் உரையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கே.என். நேரு தொடங்கிவைத்த இக்கூட்டத்தில் மாநகர செயலாளர் அன்பழகன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த இரு கிராமசபை கூட்டங்களில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை நிராகரிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.