ETV Bharat / state

நெருங்கும் தீபாவளி.. அலைமோதும் மக்கள் கூட்டத்தால் திணறும் திருச்சி கடைவீதிகள்!

Diwali: தீபாவளி பண்டிகையையொட்டி, திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 7:59 PM IST

தீபாவளி பண்டிகையையொட்டி, அலைமோதும் திருச்சி கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

திருச்சி: தீபாவளி பண்டிகை (Diwali festival) இந்து, சீக்கியம், சமணம், பெளத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையானது இம்மாதம் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று (நவ.5) பொதுமக்கள் தீபாவளி பொருட்களை வாங்க குவிந்து வருகின்றனர்.

இதற்காக, திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களான தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தருகின்றனர். திருச்சி மாநகரத்தை பொறுத்தவரை தெப்பக்குளம், சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, NSB ரோடு பகுதிகள் திருச்சி மாநகரத்தின் இதய பகுதியாக இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் தான், அனைத்து விதமான கடைகளும் அமைந்துள்ளன.

எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டாசுகள், ஆடை அணிகலன்கள், காலணிகள், இனிப்புகள் வாங்க இந்த பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காணப்படுகிறது. எனவே, அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் 186 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 500-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தெப்பக்குளம், அஞ்சல் அலுவலகம் பின்புறம்‌ மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், பிஷப் ஹீபர் பள்ளி மைதானம் மற்றும் கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பார்க்கிங் மைதானம் போன்ற இடங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பொதுமக்கள் தங்களின் உடைமைகளை ‌முன் பின், தெரியாதவர்களிடம் தங்களது ஒப்படைக்க வேண்டாம் என்றும், சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் அருகில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும், காவலர் என்று கூறிக்கொண்டு தங்கள் நகைகளை பத்திரமாக பொட்டலத்தில் மடித்து தருகிறேன் என்று கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட பாதுகாப்பு பணிகளுக்காக, திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி, திருச்சி மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் அன்பு அவர்களின் நேரடி கண்காணிப்பில் சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளுக்காக மொத்தம் 115 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: "எங்கிருந்துடா வரீங்க நீங்களாம்?" - Happy Street நிகழ்ச்சியை விமர்சித்த நடிகர் ரஞ்சித்.. கோவையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.