ETV Bharat / state

ஸ்ரீரங்கம் கோயில் சார்பில் உணவு பொட்டலங்கள் விநியோகம்! - ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் உணவு பொட்டலங்கள் வினியோகம்!

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள், கபசுரக் குடிநீர், உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யபட்டது.

ஸ்ரீரங்கம் கோவில்
ஸ்ரீரங்கம் கோவில்
author img

By

Published : May 12, 2021, 6:39 PM IST

திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள், உடன் இருப்பவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக இன்று (மே 12) ஸ்ரீ ரங்கா கோபுர வாயிலில் சுமார் 100 நபர்களுக்கு முகக்கவசங்களும், சுமார் 200 நபர்களுக்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட்டன. மேலும், கோயில் வாயிலிலுள்ள 440 நபர்களுக்கு வாழை இலையில் கட்டப்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெறுபவர்கள், உடன் இருப்பவர்களுக்கு என சுமார் 100 நபர்களுக்கு திருக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

மேலும், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் சார்பு கோயில்களான உறையூர் ஸ்ரீநாச்சியார் கோயில், திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் கோயில் , அன்பில் ஸ்ரீமாரியம்மன் கோயில்கள் மூலமாக தலா 50 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.