ETV Bharat / state

பணி நீக்கம் செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் தர்ணா

திருச்சி: பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் திருச்சி டாஸ்மாக் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Dismissed tasmac employees involved in the dharna protest in trichy

author img

By

Published : Nov 9, 2020, 11:45 AM IST

திருச்சி மண்டலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக டாஸ்மாக் பணியாளர்கள் 52 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்தப் பணி நீக்க உத்தரவை எதிர்த்து பணியாளர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் 52 பேருக்கும் ஆறு வார காலத்தில் மீண்டும் பணி நியமனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவினை மதிக்காமல் டாஸ்மாக் நிர்வாகம் செயல்பட்டுவந்துள்ளது. இதனால், உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் டாஸ்மார்க் நிர்வாகத்தை கண்டித்து, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகம் முன்பு இன்று காலை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டம் குறித்து தகவலறிந்த டாஸ்மாக் அலுவலர்கள், விரைந்து வந்து பணியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்களின் நலனில் அக்கறை கொள்ளுமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.