ETV Bharat / state

பாஜக அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலமே காவிரி நீர் நிரந்தரமாக கிடைக்கும் - தம்பிதுரை பேச்சு! - காவிரி நீர்

திருச்சி: பாஜக அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலமே கர்நாடகவிலிருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் நிரந்தரமாக கிடைக்கும் என தேர்தல் பரப்புரையின்போது கரூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பேசியுள்ளார்.

admk
author img

By

Published : Apr 4, 2019, 7:27 PM IST

தமிழ்நாட்டில்நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் காலியாகவுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை மணப்பாறை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசுகையில், "பாஜக அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலமே கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்குகாவிரி நீர் நிரந்தரமாக கிடைக்கும். அதற்காகதான் அதிமுக - பாஜக கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறோம். தமிழ்நாட்டிலும், டெல்லியிலும் காங்கிரஸ் கிடையாது. ராகுல் காந்தி பிரதமர் ஆவாரா என்ற சந்தேகம் காங்கரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் ராகுல் பிரதமரானால், இதெல்லாம் செய்யப்படும் எனக் கூறி வருகின்றனர். சூரியனில் கை வைத்தால், கை வெந்துப்போகும். இந்த தேர்தலில் சூரியனும், கையும் ஒன்றாக சேர்ந்துள்ளார்கள், கை தேராது" எனப் பேசினார்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை எதிர்த்து திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஜோதிமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:சூரியனில் கைவைத்தால் கை வெந்து போகும் சூரியனும் கையும் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.

ராகுல் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை - நம்பிக்கை இல்லாத கைக்கு ஓட்டு போடுவது பிரயோஜனமில்லை.

- தம்பிதுரை பேச்சு.

Body:திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் கரூர் பாராளுமன்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் தம்பிதுரை கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.அப்போது பொதுமக்களிடம் பேசிய தம்பிதுரை :

நிலமில்லா ஏழைகளுக்கு 2000 வழங்கப்படும் என்ற திட்டத்தை கொண்டு வந்தது நமது அரசு. அதை கொடுக்க கூடாது என்று கேஸ் போட்டவர்கள் திமுககாரர்கள்.கொடுக்க வேண்டும் என்பதுதான் நமது அரசு,கொடுக்க வேண்டாம் என்று தடுப்பது காங்கிரஸ், திமுக. கருணாநிதி 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று ஏமாற்றி ஜெயித்தார்.யாருக்கும் எதுவும் கொடுக்கவில்லை.எல்லாருக்கும் கொடுப்பதற்காக உதவி செய்வதுதான் இரட்டை இலை சின்னம்.கொடுக்கக்கூடாது என்று சொல்வது கை சின்னமும்,சூரியனும். சூரியனில் கைவைத்தால் கை வெந்து போகும். இரண்டும் ஒன்றாக சேர்ந்து இருக்கிறார்கள், கை தேறாது.கொடுப்பவருக்கு ஓட்டு போடுங்கள் தடுப்பவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்.தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக சொல்லி இருந்தேன்.ஆனால் காங்கிரஸ்காரர்கள் தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.காவிரியில் தண்ணீர் வர வேண்டும் என்றால் கர்நாடகத்தில் இருந்து தான் வர வேண்டும் அதை காங்கிரஸ் தடுக்கிறது.இப்போது உதவி செய்வது மோடி அரசாங்கம் தான்.மோடி அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலமாகத்தான் காவிரி தண்ணீர் நமக்கு நிரந்தரமாக கிடைக்கும்,நமது கிராமங்களுக்கு குடி தண்ணீர் கொடுக்கப்படும். அதற்கான திட்டங்கள் போடப்பட்டுள்ளது,அதனால் தான் இந்த கூட்டணி ஏற்படுத்தி இருக்கிறோம்.காங்கிரஸ் தமிழ் நாட்டிலும் கிடையாது,டெல்லியிலும் கிடையாது.ராகுல் பிரதமர் ஆவார் என்று அவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது.அவர்கள் சொல்வது ராகுல் பிரதமர் ஆனால் என்று தான் கூறுகிறார்கள்.பிரதமராவார் என்று அவர்களுக்கு நம்பிக்கை இல்லை நம்பிக்கை இல்லாத அந்தக் கைக்கு ஓட்டு போடுவது பிரயோஜனமில்லை இவ்வாறு தம்பிதுரை பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.