ETV Bharat / state

உத்திரப் பிரதேச மருத்துவரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சி: உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட மருத்துவரை விடுதலை செய்யக்கோரி அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Aug 12, 2020, 4:35 PM IST

உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிலிண்டர் நிறுவனத்திற்கு பணம் கொடுக்காததால் ஆக்சிஜன் சப்ளை செய்யவில்லை என்று அந்த மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றிய கபில்கான் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கபில்கான் கைது செய்யப்பட்டு ஒன்பது மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இந்திய குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்த காரணத்தால் கபில்கான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் இன்று (ஆகஸ்ட் 12) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா தலைமை வகித்தார்.

திருச்சி மாவட்ட செயலாளர் ஜனுல்லா மஹது முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் காஜா மைதீன் கண்டன உரையாற்றினார். இதில் கைது செய்யப்பட்ட மருத்துவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.