ETV Bharat / state

ஆயர் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவ குருமார்களை நியமிக்க வலியுறுத்தல் - தலித் கிறிஸ்தவ குருமார்கள்

திருச்சி: காலியாக உள்ள ஆயர் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவ குருமார்களை நியமிக்க வேண்டும் என்று தலித் கிறிஸ்தவ தேசியக் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

ஆயர் பதவி
ஆயர் பதவி
author img

By

Published : Oct 12, 2020, 4:44 PM IST

தலித் கிறிஸ்தவ தேசியக் கவுன்சில் பொதுச் செயலாளர் சார்லஸ் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "இந்தியா முழுவதும் கிறிஸ்தவ ஆயர்களாக 188 பேர் உள்ளனர். இதில் 11 பேர் மட்டுமே தலித் கிறிஸ்தவர்கள். இதேபோல் தமிழ்நாட்டில் 18 மறைமாவட்டங்கள் உள்ளது. இதில் செங்கல்பட்டில் மட்டுமே நீதி நாதன் என்ற ஒருவர் மட்டுமே தலித் கிறிஸ்தவ இனத்தைச் சேர்ந்தவர் ஆயராக உள்ளார்.

அதேபோல் ஆயர்களுக்கு மேலான பதவியான ஆர்ச் பிஷப் என்ற பதவியில் ஒருவர் கூட தலித் கிறிஸ்தவர்கள் கிடையாது. மொத்த கிறிஸ்தவ மக்கள்தொகை சதவீதத்தில் 75 முதல் 80 சதவீதம் வரை தலித் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

திருச்சி, கன்னியாகுமரி குழித்துறை, வேலூர், சிவகங்கை, சேலம் ஆகிய 5 மறை மாவட்டங்களில் ஆயர்கள் பதவி காலியாக உள்ளது. அதேபோல் ஆர்ச் பிஷப் பதவி கடலூரில் காலியாக உள்ளது.

இந்த ஆறு இடத்திற்கும் விரைவில் ஆயர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். தலித் கிறிஸ்தவர்களில் திறமையான குருமார்கள் உள்ளனர். அவர்களை இந்தக் காலியாக உள்ள பதவியில் நியமிக்க வேண்டும். இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படவில்லை.

ஆயர்கள் நியமனம் தொடர்பாக நாளை (அக். 13) திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பால் செமினரி வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் ஆயர்கள் இதில் கூடி காலியாக உள்ள ஆயர் பதவிகளுக்கு பரிந்துரை பட்டியலை முடிவு செய்யவுள்ளனர். இங்கு எடுக்கப்படும் முடிவு இத்தாலி வாடிகனுக்கு பரிந்துரை செய்யப்படும். அதன் அடிப்படையிலேயே இந்த ஆயர் பதவிகள் நிரப்பப்படும்.

ஆகையால் இந்தப் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவ குருமார்களை பரிந்துரை செய்ய வேண்டும். இதற்கு ஏற்கனவே நடந்த ஆலோசனைக் கூட்டங்களில் உத்தரவாதம் அளித்துள்ளனர். ரகசியமாக நடைபெறும் கூட்டம் என்று கூறி தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது.

அவர்களுக்கு வேண்டிய இனத்தைச் சேர்ந்தவர்களையே ஆயர் பதவிக்கு பரிந்துரை செய்யும் முறை உள்ளது. ஆகையால் காலியாக உள்ள ஆயர் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவ குருமார்களை பரிந்துரை செய்யவில்லை என்றால் அக்டோபர் 27 ஆம் தேதி திருச்சி மேலப்புதூர் அருகில் உள்ள கத்தோலிக்க ஆயர் இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இதே போல் மறை மாவட்டம் வாரியாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன், திருச்சி மாவட்ட விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட தலைவர் அக்பர் அலி, தமிழ்நாடு தேசிய தலித் கிறிஸ்தவ பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், தேசிய தலித் கிறிஸ்தவ பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ், கிறிஸ்தவ மக்கள் களம் சென்னை தலைமை ஒருங்கிணைப்பாளர் பெலிக்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.