ETV Bharat / state

கரோனா பீதி: பெற்ற தாயை நடுத்தெருவில் தவிக்கவிட்ட மகன்

திருச்சி: கரோனா பீதியில் பெற்ற தாயை மகன் நடுத்தெருவில் தவிக்கவிட்டுச் சென்ற மனிதாபிமானமற்ற சம்பவம் துறையூரில் அரங்கேறியுள்ளது.

author img

By

Published : Jul 15, 2020, 7:32 PM IST

மூதாட்டி
மூதாட்டி

திருச்சி மாவட்டம், துறையூரில் அண்ணன், தம்பி 2 பேர் வெவ்வெறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்கள். இருவரும் தொலைக்காட்சியைச் சரிசெய்யும் தொழில் செய்துவருகின்றனர். இவர்களின் 72 வயது தாய் சரோஜா, சர்பிட் நகரிலிருந்த இளைய மகன் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 11ஆம் தேதி இளைய மகனின் மனைவி திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவந்தபோது கரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவருடைய மனைவி திருச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது மனைவியுடன் சரோஜாவின் இளைய மகனும் வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.

இதனால் அவருடைய வீட்டில் தங்கியிருந்த சரோஜா கடந்த 10ஆம் தேதியன்று துறையூரில் உள்ள அவரது தம்பி வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. மீண்டும் ஜூலை 11ஆம் தேதி தனது இளைய மகன் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அப்போதும் வீடு பூட்டியிருந்துள்ளது. இதனால் பக்கத்து வீட்டில் இரண்டு நாள்கள் தங்கியுள்ளார். இச்சூழலில் சரோஜாவுக்கு அதிகளவில் இருமலும், காய்ச்சலும் ஏற்படவே அந்தத் தெருவில் வசித்துவருபவர்கள் சரோஜாவை மூத்த மகன் வீட்டிற்கு ஆட்டோ மூலம் அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் (ஜூலை 13) இரவு 9 மணி அளவில் மூத்த மகனுடன், சரோஜா துறையூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்துள்ளார். அங்கு கரோனா பரிசோதனை தற்போது செய்ய இயலாது எனவும், காலையில் வந்தால் போதும் எனவும் மருத்துவப் பணியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் மூத்த மகன் தனது தாயை மீண்டும் தனது தம்பி வீட்டிற்குச் செல்லும்படி அவரது வீட்டின் வாசலில் நேற்று முன் தினம் (ஜூலை 13) இரவு இறக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று (ஜூலை 14) காலையில் சரோஜாவை பார்த்த சர்பிட் நகர் பொதுமக்கள் மீண்டும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆட்டோ மூலம் சரோஜாவை அவரது மூத்த மகன் வீட்டில் இறக்கிவிட்டார்கள். இப்படி நடக்கும் என முன்பே கணித்த மூத்த மகன் தனது குடும்பத்துடன் திருச்சியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இதனிடையே சரோஜாவை தெருவில் இறக்கிவிடுவதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதிகளவில் இருமலும், காய்ச்சலும் தனக்கு இருப்பதாகக் சரோஜா கூறியதையடுத்து, புதிய வீட்டு குடியிருப்புப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதியினர் சிங்களாந்தபுரம் ஊராட்சிமன்றத் தலைவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பின்பு ஊராட்சிமன்றத் தலைவர் சரோஜாவை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். கரோனா பீதியில் பெற்ற தாயை, மகனே தெருவில் தவிக்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'நான் செத்துட்டதா வாட்ஸ்அப்ல மெசேஜ் பார்வேர்ட் பண்ணிட்டாங்க' - கரோனாவிலிருந்து மீண்டவர் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.