தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 2) ஒரே நாளில் 5 ஆயிரத்து 875 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டும், 98 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 57 ஆயிரத்து 613 ஆகவும், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,132 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 136 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 416ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 131பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,782 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கரோனா தொற்று காரணமாக இன்று மாவட்டத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆகவுள்ளது. அதேபோல் 1,574 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.