ETV Bharat / state

திருவெறும்பூர் அருகே சந்தியாகப்பர் சிலை சேதம்; மோதல் உருவாகும் சூழல் - போலீசார் குவிப்பு - dmk

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் பகுதியில் சந்தியாகப்பர் சிலையை சேதப்படுத்திய விவகாரத்தில் இரு தரப்பினருக்கிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

conflict between the two sides over the issue of the destruction of the Susaiyappar statue near Thiruverumbur
திருவெறும்பூர் அருகே சூசையப்பர் சிலை சேதம்; இருதரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல்
author img

By

Published : Jan 30, 2023, 4:10 PM IST

Updated : Jan 30, 2023, 4:39 PM IST

திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோயில் தெருவைச்சேர்ந்த பொதுமக்கள் புதிதாக சந்தியாகப்பர் சிலையை வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் பனையக்குறிச்சி திமுகவைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர் ரேணுகா தேவியின் கணவர் பார்த்தசாரதி ஆட்களுடன் இன்று அதிகாலை சென்று, சாலையின் குறுக்கே சிலையை வைத்துள்ளதாக கூறி சந்தியாகப்பர் சிலையை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் தரப்பிற்கும் மாதா கோயில் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து மாதா கோவில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுக்க சென்றுள்ளனர்.

இந்த பகுதியில் இருந்த மாதா சிலையைக் கடந்த 15 நாட்களுக்கு முன்பு, ஊராட்சி இடத்தில் இருப்பதாகக் கூறி நீதிமன்ற உத்தரவின் படி அகற்றினார்கள். அதற்கு மாதா கோயில் தெருவினர் எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியரை சந்தித்து முறையிட்டதோடு போராட்டம் நடத்தி வந்த நிலையில் மீண்டும் அந்தப் பகுதியில் புதிதாக வைக்கப்பட்ட சந்தியாகப்பர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மாநகராட்சி கூட்டத்தில் மயங்கி விழுந்த திமுக கவுன்சிலர்

Last Updated : Jan 30, 2023, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.