திருச்சி: ஶ்ரீரங்கம் தொகுதி குழுமணி பகுதியில் ஆங்கிலப் புத்தாண்டிற்கு 2 சமூகத்தினர் சாலையில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்பொழுது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு அரிவாள் கட்டையால் தாக்கி கொண்டுள்ளனர்.
இதில் ஒரு தரப்பினரில் 6 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மறு தரப்பில் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இது சாதி பிரச்னையாக உருவெடுத்ததற்கு காரணமாக இருந்த காத்தமுத்து என்பவரை கைது செய்யக் கூறி பொதுமக்கள் தற்பொழுது சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால், 2 தரப்பினர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
மணிகண்டன், ஏழுமலை இருவரும் சென்று முதலில் தகராறு செய்ததாகவும் பின்பு அவர்கள் இவர்களை அடித்ததாகவும் போலீசார் விசாரணை தெரிய வந்துள்ளது. மணிகண்டன் மற்றும் ஏழுமலை இருவரும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிகழ்வுக்கு இரண்டு தரப்பிலும் புகார்கள் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பெரம்பலூரில் பயங்கர விபத்து: இருவர் பலி; 25 பேர் படுகாயம்!