ETV Bharat / state

கடைமடைக்கு சென்றடைந்த காவிரி நீர் - விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சி: மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை பகுதிக்கு சென்றடைந்ததை நேரில் சென்று ஆய்வு செய்து உறுதிப்படுத்தினேன் என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அமைச்சர்
author img

By

Published : Sep 9, 2019, 6:23 PM IST

திருச்சியில் உள்ளாட்சித் துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் பேசுகையில், 'மேட்டூரில் காவிரி அணை திறக்கப்பட்ட பின்னர் கல்லணையிலிருந்தும் திறக்கப்பட்டது. தொடர்ந்து வெண்ணாறு, காவிரி ஆறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடைமடை பகுதியான திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு நேற்று முன்தினம் காவிரி நீர் சென்றடைந்தது. இதனை நான் நேரில் சென்று ஆய்வு செய்து உறுதிப்படுத்தினேன். கடைமடை பகுதிகளில் விவசாயிகள் மலர் தூவி காவிரி நீரை வரவேற்றனர்’ என்றார்.

Intro:கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் சென்றடைந்து விட்டது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

Body:திருச்சி:
காவிரி நீர் கடைமடை பகுதிக்கு சென்றடைந்து விட்டது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
உள்ளாட்சி துறை சார்பில் திருச்சியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேட்டூரில் காவிரி அணை திறக்கப்பட்ட பின்னர் கல்லணை திறக்கப்பட்டது.
தொடர்ந்து, வெண்ணாறு காவிரி ஆறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடைமடை பகுதியான திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு நேற்று முன்தினம் காவிரி நீர் சென்றடைந்து விட்டதை நான் நேரில் சென்று ஆய்வு செய்து உறுதி படுத்தினேன். இதை தொடர்ந்து நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள கடைமடை பகுதிகளில் விவசாயிகள் மலர் தூவி காவிரி நீரை வரவேற்றுள்ளனர். அதனால் மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு சென்றடைந்து விட்டது என்றார்.

Conclusion:நாகையில் காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர் என்று அமைச்சர் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.