ETV Bharat / state

அணை கட்ட ஆணைய பரிந்துரை தேவை - மத்திய அரசு! - மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்காது

திருச்சி: மேகதாதுவில் அணை கட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணைய பரிந்துரை தேவை என காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன் குமார் கூறினார்.

cauvery-river-regulatory-committee-chariman-pressmeet
author img

By

Published : Nov 1, 2019, 4:02 AM IST

காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவின் 19வது கூட்டம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு தலைமை பொறியாளர் அலுவலக கூட்டரங்கில் குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் இன்று நடந்தது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளின் பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் நவீன்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், குழுவின் 19வது கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. வழக்கம் போல கூட்டம் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. முன்னதாக கல்லணையில் நீர் விநியோக முறை குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. காவிரி படுகையில் மழைப்பொழிவு திருப்திகரமாக உள்ளது. மாநிலங்களுக்கிடையிலான காவிரி நீர் பங்கீடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதேபோல் பிலிகுண்டு முதல் காரைக்கால் வரையிலான 7 இடங்களில் ஒட்டுமொத்த நீர் அளவு போதுமான அளவில் உள்ளது. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரை கணக்கில் எடுத்து கொள்ளக் கூடாது என்று தமிழக விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இந்தப் பிரச்னை குறித்து அடுத்துவரும் கூட்டங்களில் விவாதிக்கப்படும். மேலும் இதுதொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்யும். மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்திடம் விவாதிக்கப்பட்டது.

கண்டிப்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தடையில்லா சான்றிதழ் பெறாமல் மத்திய அமைச்சகத்தின் ஆலோசனை குழுவான ஜன் சக்தி பரிசீலனை செய்யாது. அதேபோல் மாநிலங்களுக்கிடையிலான நதிகளில் நடுத்தர மற்றும் பெரிய அளவிலான கட்டுமானப் பணிகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நேரில் ஆய்வு செய்து வருகிறது. அதனால் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மத்திய நீர் ஆணையம், மேகதாது அணைக்கு அனுமதி வழங்க வாய்ப்பு இல்லை.

காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன் குமார் செய்தியாளர் சந்திப்பு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரை நியமிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும். அனைத்து விஷயங்களும் திருப்திகரமாக இருந்ததால் இந்த கூட்டம் சுமூகமாக முடிந்து உள்ளது. எவ்வித வழிகாட்டுதலும் அறிவுறுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் எப்போது? எங்கே நடக்கும்? என்பதை நவம்பர் 14ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்'' என்றார்.

இதையும் படிங்க: பொய்யான புகாரினால் சிறை சென்ற பெண் வேதனை!

Intro:காவிரி நீர் மேலாண்மை ஆணைய பரிந்துரை இல்லாமல் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்காது என்று காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன் குமார் கூறினார்.Body:திருச்சி:
காவிரி நீர் மேலாண்மை ஆணைய பரிந்துரை இல்லாமல் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்காது என்று காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன் குமார் கூறினார்.
காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவின் 19வது கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதார அமைப்பு தலைமை பொறியாளர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசின் பிரதிநிதிகள், பொதுப்பணித் துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். காலை முதல் மாலை வரை இந்த கூட்டம் நடைபெற்றது. பின்னர் மாலை நவீன்குமார் செய்தியாளரிடம் பேசுகையில், குழுவின் 19வது கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. வழக்கம் போல கூட்டம் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. முன்னதாக கல்லணையில் நீர் விநியோக முறை குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. காவிரி படுகையில் மழைப்பொழிவு திருப்திகரமாக இருந்துள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நீர் பங்கீடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் பிலிகுண்டு முதல் காரைக்கால் வரையிலான 7 இடங்களிலும் ஒட்டு மொத்த நீர் அளவு போதுமான வகையில் இருந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரை கணக்கில் எடுத்து கொள்ளக் கூடாது என்று தமிழக விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இந்த பிரச்சனை குறித்து அடுத்து வரும் கூட்டங்களில் விவாதிக்கப்படும். மேலும் இதுதொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்யும். மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின விவாதிக்கப்பட்டது.
கண்டிப்பாக இந்த ஆணையத்தின் தடையில்லா சான்றிதழ் பெறாமல் மத்திய அமைச்சகத்தின் ஆலோசனை குழுவான ஜன் சக்தி பரிசீலனை செய்யாது. அதேபோல் மாநிலங்களுக்கு இடையிலான நதிகளில் நடுத்தர மற்றும் பெரிய அளவிலான கட்டுமானப் பணிகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நேரில் ஆய்வு செய்து வருகிறது. அதனால் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மத்திய நீர் ஆணையம் மேகதாது அணைக்கு அனுமதி வழங்க வாய்ப்பு இல்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரை நியமிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும். அனைத்து விஷயங்களும் திருப்திகரமாக இருந்ததால் இந்த கூட்டம் சுமூகமாக முடிந்து உள்ளது. எவ்வித வழிகாட்டுதலும் அறிவுறுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் எப்போது? எங்கே நடக்கும்? என்பதை நவம்பர் 14ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.