ETV Bharat / state

உதயநிதி பேச்சை திரித்து பதிவிட்டதாக பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாளவியா மீது வழக்கு!

Amit Malviya: அமைச்சர் உதயநிதி பேச்சை திரித்து பதிவிட்ட பாஜக அகில இந்திய தொழில்நுட்ப அணி தலைவர் அமித் மாளவியா மீது வழக்கு திருச்சியில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

உதயநிதி சனாதன பேச்சை திரித்து பதிவிட்டதாக பாஜக ஐடிவிங் தலைவர் மீது வழக்கு பதிவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 1:25 PM IST

திமுக வழக்கறிஞர் தினகரன் பேட்டி

திருச்சி: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதியின் பேச்சை திரித்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் அமித் மாளவியா மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து திருச்சி திமுக தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.வி தினகரன் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்.2-ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சனாதன தர்மத்தை பற்றி பேசியதாகவும், அவர் பேசிய காணொளியை எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு பா.ஜ.க-வின் அகில இந்திய தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மாளவியா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை திரித்து ,சனாதன தர்மத்தை பின்பற்றி வரும் 80 சதவீதம் மக்களின் இன படுகொலைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று பொய் செய்தியினை கடந்த 2 ஆம் தேதி பதிவிட்டுள்ளளார்.

அமித் மாளவியாவின் இந்த பதிவிற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி தான் ஒருபோதும் பொதுமக்களின் இனபடுகொலைக்கு அழைப்பு விடுக்கவில்லை, சனாதன தர்மத்தின் கோட்பாடுகளில் ஜாதி, மத பாகுபாடுகள் இருக்கிறது என்றும், சமூகநீதி பாதிக்கப்படுகிறது என்றும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசி வருவதாகவும், கரோனா, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் மனிதர்களுக்கு தீங்கிழைப்பது போல சனாதன தர்மம் சமுதாய தீங்கிற்கு பொறுப்பாகிறது என்றும், எனவே இது போன்ற பொய் செய்திகளை பரப்புவதை நிறுத்தவேண்டும் என்றும், எக்ஸ் பக்கத்தில் பதில் பதிவிட்டுள்ளார்.

அமித் மாளவியாவின் இந்த பதிவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சின் சாராம்சத்தை தெளிவாக பதிலளித்த பின்பும் அரசியல் உள்நோக்கத்துடன் அரசியல் சுய லாபத்திற்காகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை வேண்டுமென்றே திரித்து, தொடர்ந்து இருபிரிவினருக்கு இடையே வன்முறையினை தூண்டும் வகையில் மாறுபட்ட கொள்கை கோட்பாடுகளை கொண்ட பல்வேறு பிரிவினருக்கு இடையில் வெறுப்பை தூண்டும் வகையிலும், சகோதரதுவத்தின் மாண்பினை குலைக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வரும் அமித் மாளவியாவும், அவர் தலைமையில் உள்ள பா.ஜ.க. அகில இந்திய தொழில் நுட்ப அணியினரும் இந்த பொய் செய்தியினை தொடாந்து பரப்பி வருகின்றனர்.எனவே அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தி.மு.க. வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் தினகரன் நேற்று (செப்.6) தேதி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின் பேரில், பாஜக ஐடிவிங் தலைவர் அமித் மாளவியா என்பவர் மீது மாநகர குற்றப்பிரிவில் சட்டப்பிரிவுகள் 153 (கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டுமென்றே செயல்படுதல்), 153 (A) (வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகையை வளர்தலும், ஒற்றுமைக்கு குந்தகமான செய்கைகளை செய்தலும்), 504 (உட்கருத்துடன் அமைதியின்மையை வேண்டுமென்றே நிந்தித்தல்), 505 (1) (b) (பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி பரிசு.. சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.