கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் காணொலி மூலம் பொதுமக்களிடம் புகார்களை கேட்டறிந்து வருகிறார்.
இந்நிலையில், மணப்பாறை பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடப்பதாக டிஐஜி பாலகிருஷ்ணனுக்கு புகார் வந்தது. இதனையடுத்து டிஐஜி உத்தரவின் பேரில் டிஎஸ்பி குத்தாலிங்கம் தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோர்குளம் பகுதியில் சட்டவிரோதமாக செப்டிக் டேங்கில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த நாகராஜன்(42), குமார்(45) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு கஞ்சா பொட்டலம் எங்கிருந்து வருகிறது, இவர்களிடம் வாங்குவது யார்? என பல்வேறு கோணங்களில் மணப்பாறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் வெட்டுக்கிளி படையெடுப்பு: விவசாயிகள் வேதனை