திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் (Trichy International Airport) இருந்து சிங்கப்பூர், மலேசியா, ஶ்ரீலங்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் திருச்சி விமானநிலையம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இன்று மதியம் 1.50 மணியளவில் திருச்சி விமான நிலைய மேலாளர் தொலைபேசிக்கு பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு (Bomb threat) வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.
இதனையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பை கவனித்து வரும் சிஐஎஸ்எப் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். திருச்சி மாநகர போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. பின், அங்கு மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உடன் விரைந்த திருச்சி மாநகர போலீசாருக்கு சுமார் 2 மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால், அங்கு மிகவும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து நடந்த பரிசோதனைக்குப் பின்னர், அது வெடிகுண்டு புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி நம்பர் யாருடையது என்பது குறித்து திருச்சி மாநகர சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஈஷா குறித்த கேள்வி - டென்ஷனான சட்ட மந்திரி - என்னவாம்?