திருச்சி: கோவையைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான BNC மோட்டார்ஸ், அதன் புதிய வாடிக்கையாளர் சேவை மையத்தை திருச்சியில் திறந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனிருத் ரவி நாராயணன் புதிய மையத்தை திறந்து வைத்து, BNC சேலஞ்சர் எஸ்110 மின்சார வாகனத்தையும் இந்நிகழ்ச்சியில் இன்று (அக்.03)அறிமுகம் செய்து வைத்தார்.
பல்வேறு பணிகளுக்கு ஏற்ற வகையில், இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் நகர்புறத்திற்கு ஏற்ற வகையிலும், கரடுமுரடான பகுதிகளில் செல்லும் வகையிலும் வடிவமைத்துள்ளது. திருச்சியில் திறக்கப்பட்டுள்ள BNC ஷோரூம் மூலம், வாடிக்கையாளர்கள் அதிநவீன மின்சார மோட்டார் வாகனங்கள் குறித்து அறிந்து கொள்ளவும், அதை அனுபவித்து பார்க்கவும் மற்றும் வாங்குவதற்கான மையமாகவும் செயல்படும்.
மின்சார வாகனங்கள் தொடர்பான தொழில்நுட்பம், சோதனை ஓட்டம் மற்றும் விற்பனைக்கு பிந்தைய சிறப்பான சேவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள உதவக்கூடும். இது குறித்து, தலைமை செயல் அதிகாரி அனிருத் ரவி நாராயணன் நிகழ்ச்சியில் பேசுகையில், "எங்களின் மின்சார மோட்டார் வாகனங்களை திருச்சிக்கு கொண்டு வருவதிலும், எங்களின் புதிய BNC சேலஞ்சர் எஸ்110ஐ சந்தையில் அறிமுகம் செய்வது குறித்தும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
2-ம் கட்ட நகரங்களில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நாங்கள் தற்போது எங்களின் மையத்தை திருச்சியில் திறந்துள்ளோம். இந்த புதிய ஷோரூம், இப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும், எங்களின் புதுமையான மின்சார மோட்டார் வாகனங்களை கொண்டு செல்வதற்கும், அதை அவர்கள் எளிமையாக கையாளுவதற்கும் முக்கிய பங்கு வகிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
BNC சேலஞ்சர் எஸ்110-ன் சிறப்பம்சம்: BNC சேலஞ்சர் எஸ்110 வாகனம் Etrol-40(எட்ரோல்-40) என்று பெயரிடப்பட்ட வகையான பேட்டரி, எளிமையாக கையாளக்கூடிய வகையிலாக 2.1 கிலோ வாட்ஹௌர் கொள்ளளவு கொண்டது. இதுமட்டுமின்றி இந்த வாகனம் கையடக்க சார்ஜருடன் கிடைக்கிறது. Etrol-40 பேட்டரி அதிகபட்ச பாதுகாப்பை கொண்டிருப்பதோடு, இதற்கு ஏஐஎஸ்-156, திருத்தம் - 3, பேஸ் - 2 தரச் சான்றிதழ் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 5 ஆண்டு அல்லது 60 ஆயிரம் கி.மீ உத்தரவாதத்தை BNC நிறுவனம் வழங்குகிறது.
அத்துடன் பாடி-சேஸ்-க்கு 7 ஆண்டுகளும், பவர் டிரெய்னுக்கு 3 ஆண்டு உத்தரவாதத்தையும் வழங்குகிறது. சேலஞ்சர் எஸ்110ஐ பொறுத்தவரை அதிகபட்ச தூரம் 90 கி.மீ. ஆகவும், அதிகபட்ச வேகம் மணிக்கு 75 கி.மீ. ஆகவும், 200 கிலோ எடையை சுமந்து கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் வசீகரமான தோற்றம், வலிமைமிக்க பாடி-சேஸ் ஆகியவை, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், எல்லாவழிப் பாதைகளில் செல்லக்கூடிய வகையிலும், சிறப்பாக வடிவமைக்கபட்டுள்ளது, இதன் சிறப்பம்சமாகும்.
இதையும் படிங்க: பெங்களூருவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து - தாயும், மகளும் உடல் கருகி உயிரிழப்பு!