திருச்சி: திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அரியலூர் மாவட்டத்திற்கு சென்று சகோதரி லாவண்யா குடும்பத்தினரை சந்தித்து ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிவிட்டுவருகிறோம்.
மாநிலத்தின் முதலமைச்சரால் அனைவருக்கும் சமமாக நியாயம் கிடைக்க வேண்டுமென்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அரசியல் லாபத்திற்காக தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருந்த ஒரு கட்சி இன்றைக்கு பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
முன் இல்லாத அளவுக்கு இப்போது தமிழ்நாடு காவல்துறை அழுத்தத்தில் இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். வீடியோ எடுத்தவர் யார் என்பதை விட வீடியோ உண்மையா என்று பாருங்கள்.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த தேர்தலில் கேட்ட சீட்டை விட இந்த முறை அதிக சீட் கேட்டுள்ளேன். தமிழக மக்களிடம் அன்பை பெற்று பலம் வாய்ந்த கட்சியாக பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது.
இன்று இரவுக்குள் கூட்டணி சீட் இறுதி குறித்து முடிவு செய்து விடுவோம் என நம்புகிறோம். பாரதிய ஜனதா முந்தைய தேர்தலில் நின்று வென்ற இடங்கள் மீண்டும் கேட்கப்படும். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது என்ற கேள்விக்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க:நிலவில் விழப்போகும் எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் - ஆராயக் காத்திருக்கும் நாசா