ETV Bharat / state

விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கவில்லை என்றால் போராட்டம் - அய்யாக்கண்ணு! - திருச்சியில் விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம்- அய்யாக்கண்ணு

திருச்சி: வறட்சியால் பாதித்துள்ள விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு
செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு
author img

By

Published : Apr 25, 2020, 4:16 PM IST

தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 33 நாள்களாக கரோனா தாக்குதலால் அனைவருக்கும் பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. வேலைக்கு செல்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய், உணவுப் பொருள்கள் வழங்குவது வரவேற்கத்தக்கது.

அதேபோல் விவசாயிகள் இரண்டு லட்சம் ரூபாய்வரை செலவு செய்து வாழை, வெற்றிலை ஆகியவற்றை பயிரிட்டிருந்தனர். வெற்றிலை தற்போது காய்ந்துவிட்டது. சூறாவளியில் வாழை உடைந்து விழுந்துவிட்டது. அதேபோல் கரும்பு காய்ந்து விட்டது. மாங்காய், பலா, தென்னை விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. நெல் விற்ற பணமும் இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் அனைவருக்கும் வழங்குவது போல் விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் தொகையை வழங்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் தராவிட்டால் அடுத்து ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொடரப்படும். அதில் போராட்டம் நடத்த அனுமதி கோரப்படும். திருச்சியிலிருந்து சென்னைக்கு 326 கிலோ மீட்டர் தூரம்வரை தகுந்த இடைவெளியுடன், 25 அடிக்கு ஒரு விவசாயி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு

கரோனா தாக்குதலுக்கு 10 பேர் உயிரிழந்தால், வறட்சியின் காரணமாக துன்பத்தில் 100 பேர் இறப்பதற்கு வாய்ப்புள்ளது. எங்களை காப்பாற்ற வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. எங்களை காப்பாற்றினால்தான் நாங்கள் நல்ல உணவு தயாரித்து மக்களுக்கு கொடுக்க முடியும்” என்றார்.

இதையும் படிங்க: ’தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் காவல்துறைதான் பொறுப்பு’ - அய்யாக்கண்ணு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.