திருச்சி மாவட்டம் துவாக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன். இவருக்கும் இவரது தந்தைக்கும் இடையே சொத்துப் பிரச்னை நீண்ட நாள்களாக இருந்துவருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக மனு அளிக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மணிகண்டன் வந்தார். அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதைக்கண்டு அருகிலிருந்தவர்கள் ஓடிச்சென்று தண்ணீரை ஊற்றி அவரை மீட்டனர். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் மணிகண்டனிடம் விசாரணை நடத்திவருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு அளிக்க வந்தவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் 46 கிலோ கஞ்சா பறிமுதல்!