ETV Bharat / state

அதிமுக ஒன்றிய செயலாளர் மீது கொலை முயற்சி - admk

திருச்சி லால்குடி அருகே சிறுமருதூர் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது 5 பேர் கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதுடன், அவரது கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளது.

அதிமுக ஒன்றிய செயலாளர் மீது கொலை முயற்சி

author img

By

Published : Jun 13, 2022, 11:01 AM IST

திருச்சி: லால்குடி அடுத்த சிறுமருதூர் ஊராட்சி தத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சூப்பர் என்ற சூப்பர் நடேசன்( 60)., இவர் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் வாளாடி கூட்டுறவு வங்கித் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

சனிக்கிழமை இரவு நடேசன், அவரது மனைவி, மகள்களுடன் வீட்டில் தூங்கிய போது, வீட்டிற்கு சென்ற ஐந்து பேர் கும்பல் நடேசனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் நடேசன் புகார் அளித்ததின் பேரில் அகலங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

அதிமுக ஒன்றிய செயலாளர் மீது கொலை முயற்சி

இது குறித்து சூப்பர் நடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அண்மையில் லால்குடியில் நடைபெற்ற அதிமுக மாவட்ட கழக செயலாளர் தேர்தலில் மாவட்ட செயலாளர் குமாரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்தவர்களை நாற்காலியை எடுத்து தாக்க முயன்று மண்டபத்தில் இருந்த மின் விளக்குகளை விக்னேஷ் உடைத்த போது அதனை தட்டி கேட்டேன். இது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் ப. குமாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும், அதிமுக தலைமையில் புகார் அளிக்குமாறு அவர் கூறியதாகவும் நடேசன் கூறினார்.

இதையும் படிங்க: தண்ணீர் பானைக்குள் தவறி விழுந்த குழுந்தை உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.