கரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் நிலையில், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியிருந்தது.
இதனையடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த, அம்மாவட்டத்தைச் சேர்ந்த 125 விசாரணைக் கைதிகள் முதற்கட்டமாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வரும் நாட்களில் படிப்படியாக விசாரணைக் கைதிகள் தொடர்ந்து விடுவிக்கப்படுவர் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: பிணையில் வெளிவந்த 136 கைதிகள்