ETV Bharat / state

திருச்சியில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழம் அழிப்பு!

திருச்சியில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழம் அழிப்பு

author img

By

Published : Jun 12, 2021, 10:46 PM IST

திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள 10 மாம்பழ குடோன்களில் மாம்பழங்கள் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அப்பகுதியில் இன்று (ஜூன்.12) திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்காக ரசாயனம் தெளிப்பதற்காக பயன்படுத்தப்படும் கருவிகள், பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆய்வில் 4 குடோன்களில் சுமார் 4 ஆயிரம் கிலோ மாம்பழங்கள் ரசாயனம் தெளிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அலுவலர்கள் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்தனர். பின் அவற்றை அரியமங்கலம் குப்பை கிடங்கில் காவல்துறையினர், மாநகராட்சி ஆய்வாளர் முன்னிலையில் அழித்தனர்.

மேலும், உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 2006-ன் படி 3 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வினை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், முத்துராஜா, வசந்த், ஸ்டாலின் , ரெங்கநாதன் , ஜஸ்டின் , அன்புச்செல்வன், வடிவேலு, சண்முகசுந்தரம் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில், ’திருச்சி மாவட்டத்தில் மாம்பழங்கள், பழங்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்பவர்கள் ரசாயனம் தெளித்து பழங்களை பழுக்க வைக்ககூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உணவு பாதுகாப்பு துறை தர நிர்ணய சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இதுபோன்ற உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கு பொதுமக்கள் 9585959595, 9944959595, 9444042322 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.