ETV Bharat / state

‘கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் இதற்கு உதாரணம் திமுக தான்’ - அர்ஜூன் சம்பத் விமர்சனம்! - இந்து மக்கள் கட்சி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது போல் கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் இதற்கு உதாரணம் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி தான் என அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார்.

arjun sambath press செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சம்பத்
தமிழகத்தில் மந்திரி சபை கூட்டம் மருத்துவமனை தான்
author img

By

Published : Jul 4, 2023, 10:12 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சம்பத்

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் முன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை அகற்றிய வழக்கில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து, செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறுகையில், “இந்த வழக்கில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வைஷ்ணவஸ்ரீயையும், தயானந்த சரஸ்வதியையும் சேர்த்து பொய் வழக்கு போடப்பட்டது.

இதுவரை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அந்த வழக்கிற்கான வாய்தா இன்று (ஜூலை 4) மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வருகின்ற ஜூலை 17‌ஆம் தேதி முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். நீதித்துறையின் செயல்பாடுகள் விசித்திரமாகவும் வியப்பளிப்பதாகவும் உள்ளது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஆனாலும் திமுக வழக்கறிஞர்கள் ஆஜராகி அவரது மனைவி வாயிலாக தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் இரண்டு மாறுபட்ட தீர்ப்பை கொடுத்துள்ளனர். அமலாக்கத்துறை செய்வது சரிதான் என்றும் மற்றொரு நீதிபதி மருத்துவ சிகிச்சை முடிந்த பின் உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் எனவும் செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பு கூறி உள்ளனர். இந்த மாறுபட்ட தீர்ப்பு தலைமை நீதிபதியிடம் சென்றுள்ளது. அங்கேயாவது நீதி நிலை நாட்டப்படுமா என்று தெரியவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நீதித்துறை வாயிலாக இந்திய அரசுக்கும்,இந்துக்களுக்கும்,சனாதன தர்மத்துக்கும் எதிராக பல்வேறு காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் தடுக்கப்படுகிறது. பல்வேறு அநீதிகள் நிகழ்வதால் நீதித் துறையில் சீர்திருத்தம் அவசியம். சீர்திருத்தம் செய்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதற்காகத் தான் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடு செய்யப்படுகிறது.

இது போன்ற நல்ல காரியங்கள் நடைபெறக் கூடாது என்று கம்யூனிஸ்ட்களும் கலவரத்தை துாண்டிவிட முயற்சிக்கின்றன. மத அடிப்படைவாத சக்திகள் பொது பொய் பிரச்சாரத்தை திட்டமிட்டு செய்கின்றனர். மதத்துக்கு ஒரு சட்டம் இருக்கக் கூடாது. ஒரே நாடு, ஒரே சட்டம் வேண்டும் அதற்கான கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால், கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. 10 லட்சம் பேரின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது இதை பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

திமுகவில் இருக்கும் மூத்த அமைச்சர் நேரு, அவரின் கட்சிக்காரர்கள் மீதே அனைத்து காரியங்களையும் ஏவி விடுவார். முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது போல் கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் இதற்கு உதாரணம் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி தான். கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக செயல்படுகின்றனர்.

அதிமுகவினர் மீது புகார் கொடுத்தபோதெல்லாம் ஆளுநரிடம் அமைச்சரை நீக்கக் கோரியவர்கள் திமுகவினர், அவருக்கு அதிகாரம் இருப்பதால் தான் மனு கொடுத்தீர்கள் ஆளுநருக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்புவதால் ஆளுநர் அவரது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். திமுகவயும் கலைப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

அரசியல் அமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையிலும் அமைச்சர் பதவியின் மகத்துவத்தை அவமதிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்பாடு உள்ளது. ஸ்ரீரங்கம் கோயில், சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை சீர்குலைப்பதே திமுகவினர் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் திட்டம் அவர்களின் தூண்டுதலுக்கு திமுக பலியாக கூடாது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:Senthil Balaji case: "3வது நீதிபதியை விரைந்து நியமித்து உடனடியாக தீர்ப்பு வழங்குக" - உச்ச நீதிமன்றம் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.