ETV Bharat / state

ஆழ்துளை கிணற்றில் கிடைத்த பழங்கால அம்மன் சிலை! - திருச்சியில் பழங்கால அம்மன் சிலை கண்டெடுக்கப்பு

திருச்சியில் ஆழ்துளை கிணறு தோண்டிய போது பழங்கால அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் பழங்கால அம்மன் சிலை கண்டெடுக்கப்பு

author img

By

Published : Feb 27, 2023, 9:15 AM IST

திருச்சி: லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள அக்ரஹாரம் தெருவில் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் இன்று (பிப். 27) புதிய போர்வெல் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஆழ்துளைக் கிணற்றில் ஏதோ சிக்குவது போல் தொழிலாளர்கள் உணர்ந்தனர்.

இதையடுத்து, ஆழ்துளைக் கிணற்றிலிருந்ததை வெளியே எடுத்துப் பார்த்த போது, அரை அடி உயரம் கொண்ட பழங்கால ஐம்பொன் அம்மன் சிலை எனத் தெரியவந்தது. இதையறிந்த பொதுமக்கள் அனைவரும் சென்று கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலையை ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில், கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன், வினோத் உட்பட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சிலையை மீட்டு வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர். கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலை நாளை (பிப். 28) லால்குடி கருவூலத்தில் ஒப்படைக்கப் படவுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேரலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.